ஐயமும் தீர்வும்

Frequently Asked Questions

இவ்விணைய வகுப்பில் சேர்ந்து பயில என்னென்ன அடிப்படைக் கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்?

பார்க்க : கற்போர்

 

இவ்விணைய வகுப்பில் சேர்ந்து பயில எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

இவ்விணைய வகுப்பில் சேரக் கட்டணம் எதுவுமில்லை, இவ்வகுப்பு இலவசமாகவே வழங்கப்படுகிறது.

 

இவ்விணைய வகுப்பை மேற்கொண்டு பயில என்னென்ன மென்பொருள் மற்றும் வன்பொருள் தேவைப்படும்?

Web browser (preferably Mozilla Firefox), Flashplayer, Windows default settings.

 

இவ்விணைய வகுப்பில் இடம்பெறும் பாடங்கள் என்னென்ன?

செவ்வியல் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாற்பத்தொன்று நூல்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பகுதிகள் பாடங்களாக இவ்விணைய வகுப்பில் இடம்பெறுகின்றன.

 

இவ்விணைய வகுப்பின் அமைப்பு என்ன?

செவ்வியல் தமிழ் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் அகம், புறம், அறம், காப்பியம், இலக்கணம் என்னும் ஐந்து கருத்தலகுகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருத்தலகும் அலகுகளாகவும், ஒவ்வொரு அலகும் பாடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. விரிவான பாடப்பொருள் அமைப்புத் திட்டத்திற்குப் பதிவு செய்த பின்னரே செல்ல இயலும்.

 

இவ்விணைய வகுப்பில் சேர்ந்து பயில்பவர்களுக்கு முடிவில் சான்றிதழ் ஏதேனும் வழங்கப்படுகிறதா?

இல்லை. தம் கற்றல் அடைவைக்(Learning achievement) கற்போரே தன் மதிப்பீட்டிற்கு உட்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இப்பயிற்சி வகுப்பில் இடம்பெற்றுள்ளது. எனவே, நிறுவன அடிப்படையில் எந்தவித மதிப்பீடும் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு தற்போது இல்லை. எனவே சான்றிதல் வழங்கும் திட்டம் இல்லை.

 

இவ்விணைய வகுப்பை நடத்துபவர் யார்?

சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) இவ்வகுப்பை நடத்துகிறது.

 

இணைய வகுப்பு தொடர்பான ஐயங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெளிவுபடுத்திக்கொள்ள இணைய வகுப்பாசிரியரைத் தொடர்புகொள்ள இயலுமா?

இயலும், கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழித் தொடர்புகொள்ளலாம். (ctol@cict.in , info@cict.in )

 

இவ்விணைய வகுப்புப் பாடங்கள் அஞ்சல்வழியாகவோ குறுவட்டு மூலமாகவோ அனுப்பப்படுமா?

இல்லை.

 

இவ்விணைய வகுப்பை ஆங்கிலம்வழி நடத்தும் திட்டமுள்ளதா?

இல்லை.

 

இவ்விணைய பாடங்கள் குறுவட்டில் பதிவு செய்யப்பட்டு விற்பனைக்குக் கிடைக்குமா?

கிடைக்காது.

 

அயல்நாடுகளிலுள்ள கல்வி நிறுவனங்கள் இணைந்து இவ்வகுப்பை நடத்தும் வாய்ப்பு உள்ளதா?

இல்லை.