கற்போர்

Learner

இணையவழிச் செம்மொழித் தமிழ், கற்க விழைவோர் அனைவருக்கும்  இலவசமாக வழங்கப் படுகிறது. இப்பாட வகுப்பில் இணைந்து கற்க விரும்புவோர் வயது வந்தவராகவும், செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பொது அறிவை நுழைவுத் தகுதியாகக் கொண்டவராகவும் இருத்தல் நல்லது. தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களைக் கற்பதில் மிகுந்த ஆர்வமுடையவராகவும், தமிழ் பண்பாடு குறித்த நேர் சிந்தனை மனப்பாங்கு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். ஊக்கக் குறைவு மற்றும் எதிர் மனப்பாங்கு கொண்டவருக்கு இவ்விணையவழிக் கற்றல் உகந்த தெரிவாகாது.

இணையவழிச் செம்மொழித் தமிழ், கற்போரை மையமாகக் கொண்ட தனிப் பயிற்சி. கற்போர் தாம் கற்க இயலும் நேரத்தையும் நேர அளவையும் தாமே நெறிப்படுத்திக் கொள்ளலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இவ்விணையக் கல்வியை வழங்குவோர், கற்போர் அனைவரும் நுழைவு நிலையில் சமமான திறனுடையவராக அமையார் என்பதை நன்கு அறிவர். எனவே, தமிழ்க் கற்றல் நிலையைச் சீர்படுத்த விரும்பும் மாணாக்கர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்விணையக் கல்வித் திட்டத்தின் இலக்குகள்  மற்றும் குறிக்கோள்களை அடையவும், கற்போர் அனைவரும் சம வாய்ப்புப் பெறுவதை உறுதி செய்யவும் கற்றல் குறையை நிரப்பும் பயிற்சித் தடங்களை உருவாக்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.